செங்குத்தாக மலையேறும் Alpine Ibex காட்டாடுகள்
நீங்கள் animal discovery சேனலில் பார்த்திருப்பீர்கள் அதாவது ஒரு மலையோடு மலையின் மீது செங்குத்தாக ஏறி மலையில் படிந்துள்ள Lichens என்று சொல்லக்கூடிய பாசிகளை சாப்பிடும். ஏனென்றால் இந்த மாதிரியான பாசிகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இந்த மலை ஆட்டின் விலங்கியல் பெயர் Alpine ibex என்பதாகும். இந்த ஆடுகள் சீதோஷண சூழ்நிலைகளுக்கேற்ப நிறங்கள் மாறுபடும். இது அதிக அளவில் குளிர் பிரதேசங்களில் காணப்படும். இந்த காட்டாடு எப்படி மலையின் மீது செங்குத்தாக இருக்கிறது? இதற்குக் காரணம் இதனுடைய கால் பாதங்களின் குளம்புகள் கூர்மையாகவும் மற்றும் அடிப்பதத்தில் கப் போன்றும் உள்ளது. இதனால் இது செங்குத்தான மலைமீது எளிதாக எற முடிகிறது. இந்த சைபீரிய காட்டாடுகள் அதிக அளவு ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மற்றும் இந்தியாவில் இமயமலையில் உள்ளது. இதனால் செங்குத்தான மலைகளில் அதிக அளவு 3000 மீட்டர் வரை சறுக்கிவிழுகாமல் ஏற முடியும். இதனுடைய ஒரு புகைப்படம் இந்த கட்டுரையுடன் இணைத்துள்ளேன். அதனைப் பாருங்கள் எப்படி மலை மீது செங்குத்தாக ஏறி பாசிகளைச் சாப்பிடுகிறது. இந்த செய்தி பிடித்திருந்தால் அதிகமாக உங்கள் முகநூல் நண்பர்களிடம் பகிருங்கள்.
நன்றி....
நன்றி....
Comments
Post a Comment